ஞாயிறு, 26 ஜூலை, 2009

நின்று கொண்டே வாழமுடியும்
என்று பச்சை மரங்கள்


உருவமே இல்லாமல்
உலா வர முடியும் என்று காற்று


குண்டு மணி அளவே இருந்தாலும்
கூட்டமாய் வாழ முடியும் என்று எறும்புகள்


ஆம் ! வாழ வேண்டும் என்று
வைராக்கியம் இருந்தால்நீ கூட வாழலாம் மனிதனே !!!


- ரா.கணேஷ்

சனி, 25 ஜூலை, 2009

களவு போன புதையல்

ஐந்தாம் வகுப்பில்பெண் பிள்ளைகள் பக்கம்
ராக்கெட் விட்டு
டீச்சரிடம் பிடிபட்டது

என் கையெழுத்தைப் பாராட்டியவளின்
பெயரை இரவுதூக்கத்தில் முணுமுணுத்தது

வாத்தியாரை கிண்டல்
செய்ததால் நூறு தோப்புக்கரணம்
போட்டது

நான் வகுப்பில் அடிவாங்கியதை
பார்த்துவிட்ட தம்பிக்கு
கடலை மிட்டாய் வாங்கித்தந்து
அவனை தாஜா செய்தது

என்று நான் வீட்டில் மறைத்த
பள்ளி குறும்புகளை

எவனோ ஒருவன்
கவிதையாய்
வார இதழில்...!